அரச ஊழியர்கள் அனைவரது மார்ச் மாத சம்பளத்தை வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை வழங்குமாறு திறைசேரிச் செயலாளர் பணித்துள்ளார்.
இதுதொடர்பான அறிவுறுத்தல் சகல திணைக்களத் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 20ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக அரசு பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.






