யாழ். போதனா வைத்தியசாலைக்கு யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இவ்விஜயத்தின் போது வைத்தியசாலையில் அமைந்துள்ள கொரோனா வைரஸ் தொற்று நோய் விடுதியையும் நோய் தொற்று ஏற்பட்டால் தேவையான வசதிகள் உள்ளனவா என்பதையும் பார்வையிட்டார்.
இதில் கருத்துரைத்த அங்கஜன் இராமநாதன்,
அண்மைக் காலமாக ஊடகங்கள் வடபகுதி மக்களிடம் கொரோனா தொற்று வந்தால் யாழ் போதனா வைத்தியசாலை தயாரா என மக்களின் சந்தேகத்திற்கும் பயத்திற்கும் பதில் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டேன்.
இந்த விஜயத்தின் போது கொரோனா நோய் தொற்றை சமாளிக்க வைத்தியசாலை எப்போதும் தயாராகவே உள்ளது.
எவரும் பயப்படத் தேவையில்லை என்று எனக்கு வலுவுட்டும் செய்தியை வைத்தியசாலை பணிப்பாளர் கூறினார்.
மக்களே அரசாங்கமும் சுகாதார அமைச்சும் கூறும் நடைமுறைகளை பின்பற்றுங்கள், நோய்தொற்று ஏற்பட்டாலும் அதனை சமாளிக்க முடியும்.
மக்கள் பீதியடையாமல் அரசாங்கம் தற்போது கூறியுள்ள “வீட்டிலிருந்து ஏழு நாள் வேலை செய்யுங்கள்” என்ற செயற்பாட்டை செய்யுங்கள் இவ்வாறு செய்தால் வடமாகாணத்தில் இந்த நோய் தொற்றை தவிர்கலாம் என்றார்.






