கொரோனாவை தடுக்க வீட்டில் இதை செய்தாலே போதும்!.. வைரலாகும் தகவலின் உண்மை என்ன?

கொரோனா வைரசை தடுக்க வீட்டில் பயன்படுத்தும் Hair Dryerயே போதுமானது என்ற தகவல் பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது.

கொரோனா வைரசின் கோரத்தாண்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அது தொடர்பான போலி செய்திகளும் பரவி வருகின்றன.

இதனை உண்மை என நம்பிய பலரும் பகிர காட்டுத்தீ போல் பரவி வருகிறது, இதனால் பல விபரீத சம்பவங்களும் நடக்கின்றன.

இந்நிலையில் ‘வீட்டில் ஹேர்டிரையர் இருந்தால், அதிலிருந்து வரும் சூடான காற்று மூலம் கொரோனா பாதிப்பை எளிதில் எதிர்கொள்ளலாம், வீடியோவை பாருங்கள்’ என வைரல் தகவல்களில் கூறப்பட்டுள்ளது.

பதிவுடன் இணைக்கப்பட்டு இருக்கும் வீடியோவில், ஹேர்டிரையர் கொண்டு முகம் முழுக்க சூடான காற்றை பீய்ச்சி அடிக்கும்போது கொரோனாவை எதிர்க்க முடியும். சூடான வெப்பநிலையில் கொரோனா வைரஸ் எளிதில் அழிந்து விடும் என்பது போன்ற தகவல்கள் இடம்பெற்று இருக்கின்றன.

எங்குமே இது உறுதி செய்யப்படாத நிலையில், உண்மையான தகவல் இல்லை என தெரியவந்துள்ளது.