கோரோனா வைரஸ் நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க தயாராகியது வெலிக்கந்தை வைத்தியசாலை

கோரோனா வைரஸ் (Covid 19) தொற்றுக்குள்ளாகிய நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் நிலையமாக வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலை சீரமைக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தால் இந்த பணி முன்னெடுக்கப்பட்டது.

கோரோனா வைரஸ் (Covid 19) தொற்றுக்குள்ளாகிய நோயாளிகளுக்கு தற்போது கொழும்பு தொற்று நோயியல் (ஐடிஎச்) வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையிலும் கோரோனா வைரஸ் (Covid 19) தொற்றுக்குள்ளாகிய நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.