ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி..!

காவற்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

மருந்து, உணவு உற்பட அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை 6 மணி தொடக்கம் திங்கட் கிழமை காலை 6 மணி வரை நாடுபூராகவும் காவற்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.