நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் இதுவரை வெளியாகிய உத்தியோகவூர்வமற்ற முடிவுகளின் படி மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோல்வியை தழுவிக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18 வட்டாரங்களை கொண்ட ஏறாவூர் பற்று பிரதேச சபையில் 8 வட்டாரங்களில் ஸ்ரீலங்க சுதந்திர கட்சியும் , 6 வட்டாரங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் , 4 வட்டாரங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.
இதன் பிரகாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோல்வியை தழுவிக்கொண்டுள்ளது.
இப் பகுதியை PLOTE அமைப்பின் வியாழேந்திரன் MPயின் கோட்டை என்பதுடன் இச் சபையை தமிழரசுக் கட்சியிடம் எழுதி வாங்கியிருந்தமை குறிப்பிடத் தக்கது.
தேர்தல் முடிவுகள்
தன்னாமுனை – SLFP
குடியிருப்பு – SLFP
மீராகேணி – SLFP
மிச்நகர் -SLFP
ஐயன்கேணி -SLFP
செங்கலடி -SLFP
ஈரளக்குளம் -SLFP
கெமுனுபுர -SLFP
களுவன்கேணி – TNA
சித்தாண்டி கிழக்கு -TNA
வந்தாறுமூலை – TNA
பன்குடாவெளி -TNA
கரடியணாறு -TNA
புல்லுமலை -TNA
தளவாய் – TMVP
மாவடிவேம்பு -TMVP
சித்தாண்டி மேற்கு -TMVP
கொம்மாதுரை -TMVP







