ஊரடங்கு சட்டத்தை மீறியவர்களுக்கு ஏற்பட்ட நிலை

ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட 20 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை இல்லாதொழிக்க அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் நிலையில், நாட்டில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி புத்தளம், நீர்கொழும்பு மற்றும் கொக்கிக்கடை பகுதிகளில் நேற்று ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டது.

இந்த நிலையி்லும், குறித்த சட்டத்தை மீறுவோரை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி 20 பேரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது