நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்ட பணியாளருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நிர்பயா குற்றவாளிகளை பல தடைகளுக்கு பின்பு இன்று அவர்களின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் இரவு நேரத்தில், ஓடும் பேருந்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் தான் மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா(23)

பாதிக்கப்பட்ட இவரை சிங்கப்பூர் வரை கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டும், அடுத்த 13 நாட்களில் உயிரிழந்தார். இவ்வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அஷய்குமார், பேருந்து ஒட்டுநர் ராம்சிங் மற்றும் சிறார் ஒருவரையும் சேர்த்து 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கின் விசாரணை நடந்துகொண்டிருந்த தருணத்தில் சிறையில் தற்கொலை செய்து கொண்டார் ஓட்டுநர் ராம்சிங். மேலும் சிறார் கூர்நோய்கு இல்லத்தில் 3 ஆண்டுகள் தண்டனைக்குப் பின்பு குற்றவாளிகளில் ஒருவரான 116 வயது சிறுவன் விடுதலை செய்யப்பட்டான்.

கடந்த 2013ம் ஆண்டில் தூக்குதண்டனை வழங்கியது நீதிமன்றம். 3 முறை தள்ளிப்போன இவர்களின் தண்டனை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனிடையே நான்கு பேரையும் தூக்கிலிடும் பணிக்கும் உத்திரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த பவன் ஜல்லாட் என்ற தூக்கிலிடும் ஊழியரை பயன்படுத்து திகார் சிறை நிர்வாகம் முடிவு செய்து, அவரை பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, தனி அறையில் தங்க வைத்து, பலத்து பாதுகாப்புடன் திஹார் சிறைக்கு அழைத்து வரப்பட்டார்.

இன்று 4 குற்றவாளிகளையும் பவனிடம், 8 மணிலா தூக்கு கயிறுகளை சிறைத்துறை அதிகாரிகள் அளித்ததில், நான்கை மட்டும் பயன்படுத்த எடுத்துக்கொண்ட அவர் ஒத்திகைப் பார்த்து, காலை 5.37 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.

4 குற்றவாளிகளை தூக்கிலிட்ட பவனுக்கு தலா ரூ.20,000 வீதிம் ரூ.80.000 ஆயிரம் ஊதியமாக தரப்பட்டுள்ளதுடன், பவனுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளது.