தேர்தலில் தமக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்களவு வெற்றியை மக்கள் ஈட்டிக் கொடுத்துள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை மற்றும் நாட்டின் அனைத்து மக்களுக்கும் நன்றி.

மக்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளனர். மாற்றத்தை மக்கள் விரும்புகின்றார்கள்” என அவர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் இதுவரையில் உத்தியோகபூர்வ வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Thank you to the people of Hambantota and those around the country for this resounding victory for the #SriLanka Podujana Peramuna. The people have spoken their minds. They want change. #LGpollSL

— Namal Rajapaksa (@RajapaksaNamal) February 10, 2018

Get real time updates directly on you device, subscribe now.

You might also like