நள்ளிரவில் காதல் மனைவியின் செயல்!… கணவன் கண்ட அதிர்ச்சி காட்சி

கணவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.

கடலூரின் பண்ருட்டி பழைய கச்சேரி ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 29), இவரது மனைவி மகேஸ்வரி(வயது 22).

கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர், தற்போது மகேஸ்வரி மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

இந்நிலையில் மணிகண்டனுக்கு குடிக்கும் பழக்கம் இருந்ததால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்றிரவு 9 மணிக்கு சாப்பிட்டு விட்டு இருவரும் படுத்துறங்கினர், அப்போது திடீரென எழுந்த மகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சத்தம் கேட்டு எழுந்த மணிகண்டனும் மனைவி இறந்த துக்கத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையே நீண்ட நேரம் ஆகியும் காலையில் கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த அதிகாரிகள் கதவை உடைத்து பார்த்ததில் இருவரும் சடலமாக கிடந்தனர்.

உடனடியாக அவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் விசாரணையை தொடங்கியுள்ளனர்.