பொது மக்களுக்கான ஓர் முக்கிய செய்தி…! ஊரடங்கு செவ்வாய் வரை நீடிப்பு

கொழும்பு, ஹம்பகா மற்றும் புத்தளம், ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை நடைமுறைக்கு வந்த ஊரடங்கு நிலை வரும் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய 22 மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு 23ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணிக்குத் தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீள நடைமுறைப்படுத்தப்படும்.

கொழும்பு, ஹம்பகா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் மீளவும் பிற்பகல் 2 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு நிலை முன்னர் நாளைமறுதினம் திங்கட்கிழமை காலை 6 மணிக்குத் தளர்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கொழும்பு, ஹம்பகா மற்றும் புத்தளம் ஆகிய மூன்று மாவட்டங்களில் தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்கு எதிர்வரும் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணிவரை மேலும் 24 மணித்தியாலங்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

நாட்டில் கோரோனா வைரஸ் தொற்று பரம்பலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கீழ் நாடுமுழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற காலப்பகுதில் சகல மதுபான சாலக்களையும் மூட அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது