ஜனாதிபதியின் அதிகாரம் ஏப்ரல் 30 வரை மட்டுமே!

அரசியலமைப்பின் படி ஜனாதிபதிக்கு ஒருங்கிணைந்த நிதியிலிருந்து பணத்தை எடுக்க கூடியது அதிகாரம் ஏப்ரல் 30ம் திகதி வரை மட்டும் இருப்பதாக UNP தலைவர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக அரச செலவு மற்றும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான செலவு அந்த நாளுக்குப் பிறகு சிக்கலாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்

ஏப்ரல் 30 ஆம் திகதி வரை பணத்தை செலவு செய்வதற்கு ஜனாதிபதிக்கு வாய்ப்பு இல்லை எனவும்,இந்த விவகாரத்தில் அரசாங்கம் எந்த கவனமும் செலுத்தவில்லை எனவும் ரணி சாடியுள்ளார்.

இந்த நிலையில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கும் புதிய நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கும் ஏப்ரல் 30ம் திகதி ஆகும் போது எக்காரணம் கொண்டும் முடியாது என்பதால் அந்த நாளுக்குப் பிறகு, அரசு ஊழியர்களின் சம்பளம், சுகாதார செலவுகள் மற்றும் மற்ற அனைத்தும் நெருக்கடியில் இருக்கக்கூடும் என்றும் கூறிய ரணில்,இந்த நிலைமைக்கு தீர்வு காண கட்சித் தலைமையை உடனடியாக வரவழைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இத்தகைய நெருக்கடிகளை அரசியல் ஆதாயங்களைப் பின்தொடர்வதன் மூலம் அல்லாமல் நாட்டைப் பாதுகாப்பதில் முன்னுரிமை அளிப்பதன் மூலம் சமாளிக்க முடியும் எனவும் ரணில் தெரிவித்துள்ளார்.