கையும் களவுமாக சிக்கிய பெண் அதிகாரி… கெஞ்சியபடியே உயிரைவிட்ட பரிதாபம்!

இந்தியாவில் கரூர் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்திராணி(50) லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

கரூர் மாவட்டம், கன்னிவாடி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வீடு கட்டுவதற்கு முடிவு செய்து, தனது வீட்டுமனையை பிரிப்பதற்கான முயற்சியில் இறங்கியதுடன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்திராணியிடம் இது சம்பந்தமான மனுவையும் அளித்துள்ளார்.

ரமேஷ் கொடுத்த மனுவிற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் ஜெயந்திராணி பலமுறை அவரை அலைய விட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ரமேஷ் லஞ்சம் எதிர்பார்க்கிறீர்களா என்று கேட்டுள்ளார்.

அதற்கு ஜெயந்தி வீட்டுமனையில் பிரச்சினை இருப்பதால் ரூபாய் 34 ஆயிரம் கொடுத்தால் அடுத்த நிமிடம் உங்களது வேலை முடிந்துவிடும் என்று கூறியுள்ளார்.

பணம் கொடுக்க மனமில்லாத ரமேஷ் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரியின் உதவியுடன் பணத்தினைக் கொடுக்க மாறுவேடத்தில் இருந்த அதிகாரிகள் ஜெயராணியை கையும் களவுமாக பிடித்ததுடன் நீதிபதியிடம் ஆஜர் படுத்த அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத ஜெயந்தி குறித்த அதிகாரிகளிடம், சார்.. சார்… தெரியாமல் பண்ணிட்டேன் என்று கெஞ்சியுள்ளார். அப்பொழு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற தருணத்தில் ஜெயந்தி, பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி உயிரிழந்த சம்பவம் பெரும் கரூர் பொதுமக்கள், அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.