யாழிலும் கொரோனா அச்சம்! அரியாலையை முற்றுகையிட்ட இராணுவம்

யாழ்ப்பாணம் – அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிஸிலிருந்து வருகை தந்த தலைமை போதகரால் சிறப்பு வழிபாடுபாடு நடத்தப்பட்டது.

அதில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரதேசத்திலிருந்தும் மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அவ்வாறு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்ட பிரதேசமான அரியாலைப் பகுதியில் தற்போது இராணுவத்தினர் முற்றுகையிட்டு தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த மதபோதகர் பாடசாலை அடிக்கல் நாட்டு நிகழ்வொன்றுக்காக கடந்த 11ஆம் திகதி சுவிஸ் நாட்டிலிருந்து வந்துள்ளார்.

கடந்த 15ஆம் திகதி அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடந்துள்ளது.அதில் 150 பேர் கலந்து கொண்டிருந்ததாக தெரியவருகிறது.

அவர்களையும் அடையாளம் காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.அதேவேளை மதபோதகருடன் நெருக்கமாக பழகிய 15 பேரில் ஒருவர் வவுனியாவை சோ்ந்தவர் எனவும், அவரை அழைத்து வந்தவர் யாழ். நவாலியை சேர்ந்தவர் எனவும், மற்றையவர்கள் அரியாலை மற்றும் கோப்பாய் பகுதிகளை சேர்ந்தவா்கள் எனவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் அதில் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மிகுதி 14 பேரை தேடும் நடவடிக்கையில், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், மருத்துவ அதிகாரிகள் களமிறங்கியுள்ளதாக தெரியவருகிறது.