வவுனியா நகரசபையைக் கைப்பற்றும் கூட்டமைப்பு?

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் வவுனியா நகரசபையில் வட்டார ரீதியான முடிவுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 07 ஆசனங்களைப் பெற்று முன்னிலையில் உள்ளது.

20 அங்கத்தவர்களைக் கொண்ட வவுனியா நகரசபையில் 10 வட்டாரங்களில் இருந்து 12பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி வட்டார ரீதியில் தாண்டிக்குளம், வவுனியா நகரம், கோவில்புதுக்குளம், பண்டாரிக்குளம், வைரவபுளியங்குளம் குடியிருப்பு, இறம்பைக்குளம் ஆகிய பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.

இதேவேளை மூன்று முறிப்பு மற்றும் பட்டானிச்சூர் ஆகிய இரட்டை அங்கத்துவ வட்டாரங்கள் இரண்டிலும் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்று 04 ஆசனங்களையும் வெளிக்குளம் வட்டாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.

மேலும், 08 பேர் விகிதாசார ரீதியிலும் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like