சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்த மத போதகர் தொடர்பில் வெளிவந்துள்ள புதிய தகவல்!

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து ஆராதணைகளை நடத்தி விட்டு சுவிஸ் நாட்டுக்கு திரும்பிச் சென்ற பிலதெல்பியா தேவாலய போதகருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதை தெரவித்துள்ளதாக தமிழ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ். அரியாலை கண்டி வீதியில் உள்ள பிலதெல்பியா கிறிஸ்தவ தேவாலயத்தில் சுவிஸில் இருந்து வந்த போதகரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

அவருக்கு தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் அந்த நாட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆனால் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்படவில்லை என அரியாலை பிலதெல்பிய தேவாலயத்தின் போதகரால் அறிவிக்கப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.