ஊரடங்கு வேளையில் நடமாடிய 790 பேர் கைது – 256 வாகனங்கள் கைப்பற்றல்

நாட்டில் தற்போது நடைமுறையிலிருக்கும் ஊரடங்கு வேளையில் வீதியில் நடமாடிய 790 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 256 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடுமுழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் நாளை காலை 6 மணிவரை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், புத்தளம், கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் நாளைமறுதினம் காலை 6 மணிவரை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மதிக்காது வீதிகளில் நடமாடிய 790 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், 256 வாகனங்கள் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அவை நீதிமன்ற நடவடிக்கைக்கு உள்படுத்திய பின்னரே உரிமையாளர்களுக்கு மீளவழங்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.