மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையின் போது வழங்கப்படும் க்லொரோக்வீன் (Chloroquine) என்ற மருந்தினை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தேவையேற்படும் பட்சத்தில் வைத்தியர்களின் ஆலோசனைகளுடன் வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைக்குள் மாத்திரம் இந்த மருந்தினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அனில் ஜாசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மருந்தானது கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்வதற்காக வழங்கப்படுவதல்ல.
எவ்வாறிருப்பினும் மக்கள் அனைவரும் உரிய சுகாதார ஆலோசனைகளைப் பெற்று வீட்டினுள் பாதுகாப்பாக இருக்குமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.






