மார்ச் 23ஆம் திகதி வங்கிகளின் தொழிற்பாடுகள்

பொதுமக்களுக்கு வங்கித்தொழில் பணிகளை வழங்கும்பொருட்டு பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிரதேசங்களில் 2020 மார்ச் 23ஆம் திகதி குறைந்த இரண்டு (2) மணி

நேரம் தமது கிளைகளைத் திறந்துவைக்குமாறு அனைத்து உரிமம்பெற்ற வங்கிகளையும் உரிமம் பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளையும் இலங்கை மத்திய வங்கி கோரியுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை மத்திய வங்கியானது இணையவழிக் கொடுப்பனவுகளைப் பயன்படுத்துமாறும் ஏதேனும் வங்கியின் சனநெரிசல் குறைந்த ஏரிஎம் இயந்திரங்களில் பணம் மீளெடுப்பனவுகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களை ஊக்குவிக்கின்றது.

அத்தகைய பணிகளை வழங்குவதில், பெற்றுக்கொள்வதில் அவசியமான சுகாதார மற்றும் பாதுகாப்புத் தேவைப்படுத்தல்களைக் கடைப்பிடிக்குமாறும் வங்கிகளுக்கும் பொதுமக்களுக்கும் இலங்கை மத்திய வங்கி ஆலோசனைகளையும் வழங்குகின்றது.