ஒரு நாட்டின் தலைவன் அழுவதைப்போல கொடுமையான ஒரு காட்சி இருக்க முடியாது! கலங்கி நிற்கும் இத்தாலி

கடந்த டிக்ஷம்பரில் சீனாவில் ஆரம்பமான கொடிய கொரோனா வைரஸானது இன்று உலகினையே ஆட்டிவைத்துக்கொண்டிருக்கின்றது.

பல நாடுகளிற்கும் வேகமாக பரவி மக்களின் இயல்பு வாழ்க்கையினையே புரட்டிப்போட்டுள்ளது இந்த கொடிய கொரோனா. அதிலும் சமீப நாட்களாக இதனால் இத்தாலி மக்கள் பெரும் அனர்தத்திற்கு முகம் கொடுத்துவருகின்றன.

தினமும் பலநூற்றுக்கண்க்காணவர்களை அங்கு பலிவாங்கிக் கொண்டுள்ளது இந்த கொரோனா.

ஒரு வீட்டின் தந்தை அழுவதைப்போலவும் ஒரு நாட்டின் தலைவன் அழுவதைப்போலவும் கொடுமையான ஒரு காட்சி இருக்கமுடியாது.

ஒரு காலத்தில் ஐரோப்பா கண்டத்தின் மிகப்பெரும் சாம்ராஜ்ஜம் (உரோமானிய பேரரசு) நிலவிய மண் அது. மேனாட்டவராக இருந்து எம் தமிழ்மொழிக்கு அளப்பெரும் தொண்டாற்றிய வீரமாமுனிவர் (Constantine Joseph Beschi) பிறந்த மண் அது.

எல்லாவற்றுக்கும் மேலாக, உலகில் மனிதர்கள் மனநிறைவுடன் வாழத்தகுந்த சிறந்த நாடாக இத்தாலி அண்மைய நாட்கள்வரை விளங்கியது. அத்துடன் சுகாதார நிலைமைகள் மகவும் மேம்பட்ட நாடாக விளங்கியது இத்தாலி.

இன்று எல்லாவற்றையுமே புரட்டிப்போட்டுள்ளது இந்த கொடிய கொள்ளை நோய் கொரோனா . இப்பேர்ப்பட்ட வளர்ந்த நாட்டுக்கே இந்நிலையெனில்….. அட கச்சி ஏகம்பா…… நினைக்கவே பயங்கரமாக இருக்கின்றது.

ஏன் இதையெல்லாம் சொல்கிறேனெனில், நாளை சில மணித்தியாலங்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது.

மிகத் தேவையான பொருட்களை வாங்கவேண்டுமென்றால் மட்டுமே வீட்டைவிட்டு வெளியில் வாருங்கள்.

அவசியம் கடைக்குப் போகத்தான் வேண்டுமெனில் தனியாக மட்டும் சென்று திரும்புங்கள்.

வீடு திரும்பியதும் கண்டிப்பாக பாதணிகளை வெய்யில் படக்கூடிய இடத்தில் கழற்றிவிட்டு கால்களையும் கைகளையும் நன்றாக கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள்.

ஏனெனில் இப்படியான இடைவெளிகளை சுகாதார மேம்பாடுமிக்க இத்தாலியின் பிரஜைகள் அலட்சியப்படுத்தியதுதான் இன்று அந்த நாட்டின் தலைவனே கண்ணீர்விடுமளவுக்கு கொண்டுவந்தது கொடிய கொரோனா என்பதை மறவாதீர்கள் அங்குள்ள நபர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.