ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் விசேட போக்குவரத்து முறைமையை முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி, உணவு விநியோகம் மற்றும் பொருளாதார நிலையங்களுக்கான அத்தியாவசியப் பொருள் விநியோகம் ஆகியவற்றை முன்னெடுக்க விசேட போக்குவரத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு அனுமதி வழங்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.






