நிபா, வெள்ளம், கொரோனா…. அழகிய காதல் ஜோடியின் திருமணத்திற்கு அடுத்தடுத்து வில்லனாக வந்த ஆபத்துக்கள்! இறுதியில் எடுத்த முடிவு?

கடந்த 2018ம் ஆண்டு நடைபெற இருந்த அழகிய காதல் ஜோடியின் திருமணம் 2020ஆம் ஆண்டு வரும் வரை பல்வேறு காரணங்களுக்காக தள்ளி போடப்பட்டுள்ளது.

கேரளாவின் கோழிக்கோட்டில் இரணிபள்ளம் பகுதியில் வசித்து வருபவர்கள் பிரேம்சந்திரன் மற்றும் சான்டிரா சந்தோஷ் இவர்களது திருமணம் கடந்த 2018ம் ஆண்டு மே 20ந் திகதி நடைபெற நிச்சயிக்கப்பட்டிருந்தது.

எனினும், மே மாதத்தில் கேரளாவில் நிபா வைரஸ் பரவி திருமணத்தை நிறுத்தியுள்ளது. நிபா வைரஸ் பாதிப்பு குறைந்தபின் திருமணம் நடத்தி விடலாம் என இவர்களது உறவினர்கள் நினைத்துள்ளனர்.

ஆனால், மணமகனின் நெருங்கிய உறவினர் ஒருவர் மரணம் அடைந்த நிலையில், ஒரு வருடத்திற்கு திருமணம் தள்ளி போயுள்ளது. இதன்பின்னர் கடந்த 2019ம் ஆண்டு ஓணம் பண்டிகை விடுமுறையையொட்டி திருமணம் நடத்த முடிவானது.

எனினும் கடந்த ஆண்டு ஆகஸ்டில் பெருவெள்ளம் ஏற்பட்டு விளையாடியது. இதனால் 2வது முறையாக திருமணம் நடத்துவது ஒத்தி வைக்கப்பட்டது.

பின்பு, இந்த வருடம் மார்ச்சில் திருமணம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக மண்டபம் முன்பதிவு செய்யப்பட்டது.

அதற்காக பணம் கொடுக்கப்பட்டது. 2 ஆயிரம் பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுக்கப்பட்டது.

ஆனால் இந்த முறை கொரோனா வைரஸ் வில்லனாக வந்து நின்றது. இதனால் பெரிய அளவில் மக்கள் ஒன்றாக கூடுவதற்கு அரசு தடை விதித்தது.

இதனை தொடர்ந்து 3வது முறையாக திருமணம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனை நல்ல விதத்தில் எடுத்து கொண்டு இரண்டு பேரும், வரும் செப்டம்பரில் திருமணம் செய்து கொள்வதற்காக தயாராக உள்ளனர். இந்த தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.