கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோவில் தல அஜித், வைரலாகும் வீடியோ.

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்குபவர்.

இவரின் திரைப்படங்கள் வெளியானால் அதை அவரின் ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழா போல் கொண்டாடுவார்கள்.

கடந்த வருடம் இவரின் நடிப்பில் வெளியான திரைப்படங்களான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்கள் மிக பெரிய அளவில் வெற்றியடைந்த்தது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

வலிமை திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார், இசையமைபாளர் யுவன் சங்கர் ராஜா இதில் இசையமைக்கிறார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு 70% வரை முடிந்துள்ள நிலையில், வலிமை படத்தின் அப்டேடுக்காக ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் அவரின் ரசிகர்கள் சமுக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோவை, அவர் நடித்த திரைப்படத்தின் காட்சி ஒன்றின் மூலம் பரப்பி வருகின்றனர்.

கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படத்தின் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியில், நடிகர் அஜித் கைக்களை கழுவும் வீடியோவை #LetsDoHandWashNow என்ற டாக்கின் மூலம் டிரெண்டாகி வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like