இந்த பொருட்களை தொட்டால் உடனே மறக்காமல் கை கழுவுங்கள்! இல்லை நொடியில் கொரோனா வந்துடும்… அலட்சியம் வேண்டாம்?

கொரோனா வைரஸ் நோயெதிர்ப்பு குறைவாக இருப்பவர்களை எளிதில் தாக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

பெரும்பாலும் நோயெதிர்ப்பு சக்தி முதியவர்கள், குழந்தைகள், உடல்நல பிரச்சனைகளான சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்களுக்கு குறைவாக இருக்கும்.

எனவே இவர்கள் கொரோனா வைரஸ் பரவும் இக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதோடு ஒவ்வொருவரும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள், ஜூஸ்கள் போன்றவற்றை எடுக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள்

உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸைத் தடுக்க ஒருசில அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்துகிறது.

அவையாவன,

 • அடிக்கடி கைகளை சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு கழுவ வேண்டும்.
 • தும்மல் அல்லது இருமல் பிரச்சனை உள்ளவர்களிடம் இருந்து குறைந்தது 1 மீட்டர் அல்லது 3 அடி இடைவெளியைப் பராமரிக்கவும்.
 • அசுத்தமான கைகளால் கண்கள், மூக்கு மற்றும் வாய் பகுதியை தேவையில்லாமல் தொடாதீர்கள்.
 • தும்மல் அல்லது இருமலின் போது, வாய் மற்றும் மூக்குப் பகுதியை டிஸ்யூ பேப்பர் அல்லது துணியால் மூடிக் கொள்ளவும்.
 • காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும்.
எதெல்லாம் தொட்டால் கைகளைக் கழுவ வேண்டும்?
 1. பணம்
 2. நாணயங்கள்
 3. கதவுகள் அல்லது கைப்பிடிகள்
 4. மாடிப்படி கைப்பிடி
 5. டேபிள் டாப்
 6. செல்லப்பிராணிகள்
 7. மொபைல்/ஸ்மார்ட்போன்
 8. காய்கறி வெட்டும் பலகை
 9. சமையலறை ஸ்பாஞ்ச்
 10. பேனாக்கள்
 11. அடி பம்புகள்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like