தனக்கு வாக்களிக்குமாறு அழுத்தம் கொடுப்பதாக வாக்காளர்கள் விசனம்

யாழ் மாநகர சபை தேர்தலில் 13 ஆம் வட்டாரத்தில் தேசிய கட்சி ஒன்றில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வாக்குச்சாவடி அதிகாரிகளுடன் இணைந்து மக்களை தனக்கு வாக்களிக்குமாறு அழுத்தம் கொடுப்பதாக வாக்காளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் அமைந்துள்ள குறித்த வாக்கு சாவடியில் இவ்வாறான மோசடி சம்பவம் ஒன்று இன்று(10) சில அரச அதிகாரிகளின் செயல்பாடுகளுடன் நடைபெறுகின்றது.

இம்மோசடி நடவடிக்கை குறித்து உரிய அதிகாரிகளுக்கு தெரிய படுத்திய நிலையிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

குறித்த வேட்பாளர் தனக்கு வாக்களிக்காதவர்களை பின்னர் பார்ப்பதாகவும் இப்போது யாருக்கு வாக்களிப்பீர்கள் என்பதை தான் அறிவதாகவும் கூறி அச்சுறுத்தி வருவதாக வாக்காளர்கள் கூறினர்.

அத்துடன் யாழ் மாவட்டத்தில் தேர்தல் முறைப்பாடுகளுக்கு மேற்படி 0213207443 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like