நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்குமான போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரிசி, மரக்கறி போன்வற்றிற்கான போக்குவரத்திற்கும் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






