கோரோனாவால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் சிகிச்சையின் பின் வீடு திரும்பினார்

நாட்டில் முதலாவது கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நபர் சிகிச்சை மூலம் முழுமையாகச் சுகமடைந்த நிலையில் கொழும்பு தொற்று நோயில் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

இத்தாலி நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்டவரே இவ்வாறு கோரானா தொற்றுக்குள்ளாகி கொழும்பு தொற்று நோயில் வைத்தியசாலை (ஐடிஎச்) சுகமடைந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

52 வயதுடைய அவர் இந்த மாத முற்பகுதியில் கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தேசிய தொற்று நோயில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிசிக்சை பெற்று வந்தார்.

இரண்டு வாரங்கள் சிகிச்சை பெற்ற அவர், முழுமையாகச் சுகமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளர்.

இதேவேளை, சீனா நாட்டுப் பெண் ஒருவரும் கோரோனா தொற்றுக்குள்ளாகி தேசிய தொற்று நோயில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று முழுமையாகச் சுகமடைந்து விடுவிக்கப்பட்டார்.