லண்டன் கடைகளில் ஏன் இப்படி அநியாயம்! தமிழர் கூறும் வேதனையான விடயம்! உங்களிற்குத் தெரியுமா..?

பிரித்தானியாவில் எழுந்துள்ள தற்போதைய அசாதாரண சூழ்நிலையைப் பயன்படுத்தி பல தனியார் வர்த்தக நிறுவனங்கள் மனிதத்தன்மையற்று பொருட்களை மிக அதிக விலைக்கு விற்கிறார்கள்.

உதாரணமாக பச்சை மிளகாய் மற்றும் பாவற்காயின் விலைகளை பாருங்கள் இதை விட இன்றும் அதிகமான தமிழர்கள் பயன்படுத்தம் பொருட்களில் திடீர் விலை அதிகரிப்பு ஏற்புடையதல்ல என மக்களும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இது சட்டவிரோதமானதும், தண்டைக்குரிய குற்றமுமாகும் என பிரித்தானியாவின் சட்டம் கூறுகிறது.

உங்கள் பகுதிகளிலுள்ள கடைகளில் கட்டுப்பாட்டு விலையை மீறினால் கீழுள்ள நுகர்வோர் பாதுகாப்பு திணைக்கள இலக்கத்தில் தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றார்கள்.

For general enquiries, please call +44 (0)20 7798 7264

இந்த பகுதியை அழுத்தி தகுந்த ஆதாரங்களுடன் உங்கள் முறைப்பாட்டை செய்யலாம்

Pakee King
இக்கட்டான கால நிலைமையில் அனைவருக்கும் பயன்படும் வகையிலான உண்மையான கருத்துக்கள் எந்த நாடோ,எந்த நாட்டு மக்களோ இப்படியான வேலைகளை செய்ய வேண்டாம். நாம் பிறக்கும் போதும் எதுவுமே கொண்டு வரவில்லை அதுபோல இறக்கும் போதும் எதுவுமே கொண்டு போவதுமில்லை. இருக்கிற காலம் வரை அனைவரும் மனித நேயத்துடன் நடந்து கொள்வோம். கொரோனா வைரஸ் வந்தது மனிதன் மனித நேயத்தை உணர்த்த தான் விளங்கிக் கொள்ளுங்கள் மானிட சமுதாயமே.

Sandrakumar Chandralingam
வணக்கம் அண்ணா நான் சுவிஷலிருந்து குமார் உங்க பதிவு ஆரோக்கியமானது. நல்லா உறைக்கிறமாதிரி சொன்னீர்கள் .

ஆனால் இங்கு நிலமை வேறு உண்மையில் இங்குள்ள கடைகளில் பரவலாக எல்லா சாமான்களும் கிடைக்கின்றன. குறிப்பாக எம்மவர் வியாபார இடங்களிலும் அநேகமாக எல்லா சாமான்களும் கிடைக்கின்றன.

விலைகள் கூட எதிர்பார்த்தளவு ஏற்றப்படவில்லை. அவர்களை நாம் நிச்சயமாக பாராட்ட வேணும் . இவர்களை முன்மாதிரியாக பார்த்து மற்றவர்களும் மாறட்டும். அன்புடன் குமார் .. சந்திரகுமார்