வைரஸ் கிருமி தொற்றை அழிக்கும் அதிகளவான நுண்ணுயிர் அழிப்பு மருந்து தேவைப்படும் பிரதேசங்களில் அவற்றை தெளிப்பதற்காக விமானப் படையினரின் உலங்குவானூர்திகள் பயன்படுத்தப்படவுள்ளன.
இதற்காக கட்டுநாயக்க விமானப் படை முகாமின் பொறியியல் பிரிவினர் சில உலங்குவானூர்திகளை நவீனமயப்படுத்தியுள்ளனர்.
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பெல் 212, பெல் 412 மற்றும் எம்.ஐ.17 ஆகிய உலங்குவானூர்திகள் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவற்றில் நுண்ணுயிர் அழிப்பு மருந்து தெளிக்கும் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.
தேவையான நேரத்தில் பயன்படுத்தும் வகையில் நவீனமயப்படுத்தப்பட்டுள்ள இந்த உலங்குவானூர்திகளை விமானப்படை தளபதி அண்மையில் மேற்பார்வையிட்டுள்ளார்.






