வாக்களிப்பு நிலைய ஒத்திகைகள் வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் இன்று மாலை 5 மணிக்கு முன்னர் நிறைவடைந்தன.

நாளை நடைபெறும் உள்ளூராட்சி சபைகள் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலைய ஒத்திகைகள் வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் இன்று மாலை 5 மணிக்கு முன்னர் நிறைவடைந்தன.

நாளைக் காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகின்றன. வாக்களிப்பு நிலைய மூத்த தலைமை அதிகாரி தலைமையில் வாக்குப் பெட்டிகள் முற்பகல் அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டன.

வாக்களிப்பு நிலையத்தில் கடையாற்றும் பெண் அலுவலர்கள் உள்ளிட்டோர் இன்று மாலை 3 மணிக்கு வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைக்கப்பட்டனர்.

வாக்களிப்பு நிலைய இளநிலை தலைதாங்கும் அதிகாரி உள்பட அலுவலர்களின் பங்களிப்புடன் வாக்களிப்பு நிலைய ஒத்திகைகள் இன்று 4 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றன.
இந்த நிலையில் வடக்கின் 5 மாவட்டங்களிலும் சுமுகமான வாக்களிப்புக்குரிய அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தன. நாளைக் காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகும்.

வாக்களிப்பு நிலையத்தில் கட்சிகளின் முகவர்கள் மற்றும் தேர்தல் கண்காணிபாளர்களுக்காக பிரத்தியேக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது” என்று வடக்கின் 5 மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அலுவலர்களும் தெரிவித்தனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like