கொரோனா வைரஸ் பரிசோதனையை கண்டுபிடித்த இந்திய நிறுவனம்.. விலை எவ்வளவு தெரியுமா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவது அதன் தாக்கத்தைக் குறைப்பதற்காக மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக இன்று இரவு 12 மணி முதல் 144 தடை உத்தரவு மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் ஒருவருக்கு பரவியுள்ளதா? என்பதை உறுதி செய்யவே இப்போதுள்ள வசதியின்படி ஒருசில நாட்கள் ஆகின்றது. எனவேதான் கொரோனா வைரஸ் பரவியுள்ளதா? என்பதை கண்டுபிடிக்கும் வரை சந்தேகம் உள்ளவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

இந்த நிலையில் இந்தியாவின் முதல் உள்நாட்டு கொரோனா வைரஸ் சோதனைக் கருவி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புனேவைச் சேர்ந்த மைலாப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் உருவாக்கி உள்ள இந்த கருவியின் மூலம் ஒரு வாரத்திற்குள் 1.5 லட்சம் சோதனைகள் வரை மேற்கொள்ள முடியும் என தெரிகிறது.

இந்த கருவியின் விலை ரூ.80 ஆயிரம் மட்டுமே இந்த கருவியின் மூலம் உடனுக்குடன் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்திவிட்டால் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுவதை தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது.