தங்கை மீது ஏற்பட்ட ஒரு தலைக்காதல் கொலையில் முடிந்தது!! அண்ணனின் பரபரப்பான வாக்குமூலம்!!

தங்கை மீது ஏற்பட்ட ஒருதலை காதலால் அவரை வெட்டி கொன்றதாக அண்ணன் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.தமிழ்நாட்டின் திருச்சியை சேர்ந்த சிவசுப்பிரமணியனின் மகள் ஹேமலதா (27).

ஹேமலதாவை திருச்சியை சேர்ந்த வீரமணி என்பவருக்கு திருமணம் செய்து கொடுக்க அவரது பெற்றோர் முடிவு செய்து இருந்தனர்.இதற்கான நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற இருந்தது. இந்நிலையில் சிவசுப்பிரமணியனின் அண்ணன் மகன் சக்திகுமார் (33) நேற்று முன்தினம் ஹேமலதா வீட்டுக்கு அரிவாளுடன் வந்தார்.
ஆத்திரத்தில் இருந்த சக்திகுமார் சிவசுப்ரமணியனை வெட்டினார், பின்னர் அங்கிருந்த ஹேமலதாவின் தலை, கழுத்து ஆகிய இடங்களில் சக்திகுமார் வெட்டிய நிலையில் சம்பவ இடத்திலேயே ஹேமலதா துடிதுடித்து இறந்தார்.ஹேமலதாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது சித்தப்பா வைரவேலயும் (50) வெட்டி விட்டு சக்திகுமார் அங்கிருந்து தப்பியோடினார்.
வெட்டுப்பட்ட இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் சக்திகுமாரை தேடி வந்த நிலையில் திருச்சி நீதிமன்றத்தில் அவர் சரணடைந்துள்ளார்.குடும்ப தகராறு, சொத்து தகராறு காரணமாக சக்திகுமார் தங்கை முறையுள்ள ஹேமலதாவை வெட்டி கொலை செய்ததாக பொலிசார் முதலில் வழக்குப்பதிவு செய்தனர்.ஆனால், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சக்திகுமார் தங்கை முறையான ஹேமலதாவை அவர் கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே பைக்கில் கல்லூரிக்கு அழைத்து சென்றுள்ளார்.ஹேமலதா படிப்பை முடித்த பின்னரும் இது தொடர்ந்துள்ளது.அப்போது தங்கை என்ற உறவையும் மீறி அவரை ஒருதலையாக சக்திகுமார் காதலித்து வந்துள்ளார். இந்த முறை தவறிய காதலுக்கு ஹேமலதா உடன்படவில்லை.
இந்நிலையில், ஹேமலதாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதை அறிந்த சக்திகுமார் தான் விரும்பிய ஹேமலதாவை யாரும் திருமணம் செய்து விடக்கூடாது என்ற வெறியில் அவரை கொன்றுள்ளது தெரியவந்துள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like