கதறக் கதற பிள்ளையை நடுவீதியில் விட்டுச் சென்ற கொடூரமான தாய்!!

வீறிட்டு அழும் குழந்தையை விட்டு விட்டு ஒரு தாய் காரை ஓட்டிச் செல்லும் மனதைப் பதை பதைக்கச் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.தெற்கு Brazilஇன் Curitibaவில் வழிப்போக்கர் ஒருவரால் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

சிவப்பு நிறக் கார் ஒன்றின் பின்னாலிருந்து ஒரு சிறு பெண் வீறிட்டு அழும் குரல் கேட்கிறது.அந்தக் குழந்தை ”அம்மா, என்னை மன்னித்து விடுங்கள், தெரியாமல் செய்துவிட்டேன்” என்று கதறுகிறாள்.
கார் நிற்பது போல் வேகம் குறைகிறது பின் திடீரென வெகமாகச் சென்றுவிடுகிறது.குழந்தை வீரீட்டு அழுதவாறே காரின் பின்னால் ஓடுவதுபோல் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.அந்தக் குழந்தையின் தாய் மீது புறக்கணித்தல் மற்றும் சிறார் துன்புறுத்தல் பிரிவுகளில் கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அந்தப்பெண்ணின் தாய் குழந்தையை தவிக்க விடும் நோக்கில் அவ்வாறு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
அவளது வழக்கறிஞரோ அந்தக் குழந்தை கீழ்ப்படியவில்லை என்றும் கார் ரேடியோவை சத்தமாக வைத்திருந்ததால் குழந்தை காரில் இருப்பதாக நினைத்து காரை ஓட்டிச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like