யாழில் கொரொனா தீவிரம் – மூடிய அறைக்குள் மருத்துவர், இராணுவம், அரச அதிகாரிகள் எடுத்த தீர்மானங்கள்

யாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுவதைக் கட்டுப்படுத்த சிறப்பு தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியிருக்கின்றார்.

ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், யாழ். மாவட்டத்திலுள்ள சிரேஸ்ட மருத்துவர்கள், கொரோனா எதிர் ப்பு செயலணியின் உறுப்பினர்கள், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆளுநரின் செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சமுதாய மருத்துவ நிபுணர், இராணுவம், யாழ். மாவட்ட செயலக அதிகாரிகள், தலமையில் இந்த உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்த தீவிரமாக பேசப்ப ட்டிருக்கின்றது. மேலும் வடக்கில் முற்றாக இல்லதொழித்தலுக்கு என்ன செய்வது என்பன குறித்து தீவிரமாக ஆராயப்பட்டிருக்கின்றது.

மேலும் ஆராயப்பட்டிருக்கும் விடயம் தொடர்பாக அனைவரு ம் இணைந்து அதி முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை எடுத்துள்ளதாகவும் கூறினார்.

இதன் ஒரு அங்கமாக யாழில் சிறப்பு இராணுவப் படையணி களமிறங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.