தொழிலில் பாரிய நஷ்டம்… பிரபல தயாரிப்பாளர் தூக்குப் போட்டுத் தற்கொலை

பிரபல கன்னட சினிமா தயாரிப்பாளர் கபாலி மோகன் என்கிற வி.கே.மோகன் ஓட்டலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கன்னட சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவருக்கு பெங்களூர் அருகில் உள்ள பீன்யா என்ற பகுதியில் ஓட்டல் ஒன்று உள்ளது. இவர் கடந்த இரண்டு மூன்று நாட்களாக அங்கு தங்கி இருந்துள்ளார்.

அதற்கு பிறகு அவர் வீட்டுக்குச் சென்று விட்டார். இந்நிலையில், நேற்று காலை அவர் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலைக்கு முன் செல்பி வீடியோவில், ஏன் இந்த முடிவை எடுத்தேன் என்று கபாலி மோகன் தெரிவித்துள்ளார்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

பீன்யா பகுதியில் புதிய பேருந்து நிலையத்தில் கடைகளை வாடகைக்கு விடுவதற்கான ஏலத்தை இவர் எடுத்திருந்தார்.

அந்த பேருந்து நிலையம் ஊரைவிட்டு தள்ளி இருந்ததால், மக்கள் பயன்பாட்டுக்கு அது வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மிகப்பெரிய நஷ்டம் அடைந்ததாகக் கூறியுள்ள அவர், வங்கி கடனை கட்ட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது, கன்னட சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like