அவசியமான இடங்களில் வங்கிகளைத் திறக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

வங்கிச் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவித்துள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, அவசியமான இடங்களில் ஊரடங்கு வேளையும் வங்கி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுள்ளார்.

இதுதொடர்பான அறிவுறுத்தல் அனைத்து வணிக வங்கிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் கோரானா வைரஸ் தொற்றுப் பரம்பலை கட்டுப்படுத்த தொடர் ஊரடங்கு நிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளை மக்கள் பெற்றுக்கொள்ள வசதியாக சுழற்சி முறையில் 60-72 மணித்தியால இடைவெளியில் 8 மணித்தியாளங்கள் தளர்த்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like