தனிநபர் கடன்கள் அறவீடு ஏப்ரல் 30 வரை இடைநிறுத்தம் – அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவிப்பு

அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்களின் சம்பளத்தை ஆதாரமாக வைத்து வழங்கப்பட்ட தனிநபர் கடனுக்கான தவணைக் கட்டணம் ஏப்ரல் 30ஆம் திகதிவரை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்தித்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்தார்.

அரச ஊழியர்களினதும் தனியார் துறை நிறைவேற்று அதிகாரம் அல்லாத ஊழியர்களினதும் சம்பளத்தில் கடன் தவணை கட்டணங்கள் அறவிடுவது 2020 மே மாதம் 30 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like