நிரந்தர தீர்வு நிச்சயம் கிட்டும்? – இரா.சம்பந்தன்

தற்;போது நடைபெறும் ஆட்சி எம்மீது திணிக்கப்பட்ட ஆட்சி, இந்த ஆட்சி முடிவுக்கு வர வேண்டும். எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் குரலையும், கையையும் பலப்படுத்தும் வகையில் தமிழ் மக்கள் செயற்பட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களிடம் ; வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிரந்தர தீர்வு நிச்சயம் கிட்டும்? தமிழ் தேசியத்தோடு நிலைத்திரு தமிழா எனும் தொனிப்பொருளில், நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான யாழ்.மாநகர சபை வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் கூட்டம் இன்று (06) யாழ். சங்கிலியன் கிட்டுப் பூங்காவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு வேண்டுகோள்விடுத்துள்ளார். 
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், எதிர்வரும் 10 ஆம் திகதி ஒரு உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்நோக்கவுள்ளோம். அநடத உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சில முக்கியவிடயங்களைக் கொண்டுள்ளது. நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல். 
மத்தியல் மிகத் தீவிரமான போட்டி நிலவுகின்றது. தேசிய பிரச்சினை தீர்;ப்பது தொடர்பில் பல கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. நல்லாடசி அரசாங்க கை சின்னத்தினை உடைய மைத்திரிபால சிறிசேனவினதும், ஐக்கிய தேசிய கட்சியினை தலைமை தாங்கும் ரணில் விக்கிரமசிங்க உருவாக்கப்பட்டுள்ளது.
 அவர்கள் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டுமென்ற கருத்தினை பகிரங்கமாக நடைமுறைப்படுத்தவுள்ளனர். தமிழ் மக்களுக்கு ஏற்புடைய வகையில், அவற்றினை நிறைவுக்கு கொண்டுவருவதற்கு தமிழ் மக்கள் சார்பாக இருக்கின்றோம். 
 
இடைக்கால அறிக்கை மற்றும் உபகுழுக்களின் அறிக்கை பெற்று, இந்த தேர்தல் நிறைவடைந்த பின்னர் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் 2ஃ3 பெரும்பான்மையைப் பெற்று அதன் பின்னர் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாக மக்களின் அபிப்பிராயங்களை பெற்று உருவாகுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன.
இவ்வாறான சூழ்நிலையில் தான் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தேசிய தலைவர்களான மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோர் மக்கள் மத்தியில் வேறு விதமான பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகின்றார்கள். சமீபத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இத் தேர்தல் முக்கியமான ஒரு தேர்தல் இந்த தேர்தல் நிறைவடைந்த பின்னர் முக்கியமான நிலமைகள் ஏற்படுவதற்கான சூழல் இருக்கின்றதென்றும் இந்த நாட்டில் ஒற்றையாட்சியா தமிழீழம் மலர வேண்டுமா என்பது இந்த தேர்தலின் பின்னர் முடிவு செய்யப்படுமென்று கூறியிருந்தார்.
தமிழ் மக்கள் ஒற்றையாட்சியை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. தமிழீழத்தினை தற்போது கேட்கவில்லை.
சர்வதேச சமூகத்துடன், பாரத பிரதம இந்திராகாந்தியுடன் பேசியதன் அடிப்படையில், சர்வதேச சமூகம் தமிழீழ கோரிக்கைக்கு ஆதரவாக இல்லை. என்ற கருத்தினையும், இந்தியாவில் உள்ள மாநிலங்கள் போன்று சுயாட்சியைப் பெறுவதற்கு விரும்பினால் உதவுவதாக கூறிய காரணத்தின் நிமித்தமும், அமர்தலிங்கம் தமிழ் மக்களுக்கு ஏற்புடைய தீர்வு உருவாக்க Nவுண்டுமென்று பாராளுமன்றத்திலும் வெளியிலும், தமிழ் மக்கள் பரிசீலிப்பார்கள் என்ற கருத்துக் கூறப்பட்டது.
1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் சில கருமங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 13வது அரசியல் சாசனத்தின் ஊடாக ஒரு அளவு அதிகாரப் பகிர்வு ஏற்பட்ட போது, அது ஒரு முழுமையான தீர்வாக இல்லாமல் இருந்தாலும் கூட, நாங்கள் எமது பயணத்தின் முக்கிய அடி எனக் கோரி, தமிழீழத்தினை கோரவில்லை. இந்த அரசியல் சாசனத்தின் ஊடாக எமது இறையாண்மையின் அடிப்படையில், உமது மக்களின் ஜனநாயக தேவைகளின் அடிப்படையில், உள்ளக சுயநிர்ணய உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு, அரசியல் பொருளாதார சமூக கலாசார விடயத்தில் தமது தலைவிதியை தாமே நிர்ணயிக்கும் வகையில், உரிமையைப் பெற்று அதன் மூலமாக போதிய சுயாட்சியைப் பெற்று, இந்த நாட்டில் சம பிரஜைகளாக நாங்கள் வாழ்வதற்கு, கௌரவத்துடன், பாதுகாப்பாக எமக்கும் உரிமை உண்டு. அவ்விதமான தீர்வையே வேண்டி நிற்கின்றோம்.
ஒரு நாட்டிற்குள். பிரிக்கப்படாத நாட்டிற்குள், பிரிக்கமுடியாத நாட்டிற்குள், அவ்விதமான தீர்;வினை ஏற்றுக்கொள்ளத் தயார் என கூறியுள்ளோம்.
ஆகையினால், மகிந்த ராஜபக்ச கூறும் கருத்து அர்த்தமற்ற கருத்து. சிங்கள மக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்துவதற்காக அவ்வாறான கருத்துக்களை அவர் கூறியிருக்கின்றார்.
இவ்வாறான பின்னணியில் தான் இந்தத் தேர்தல் நடைபெறுகின்றது. ஆரசியல் சாசனத்தினை உருவாக்குவதற்கு தற்போது நடைபெறும் முயற்சி இவையுடன் தொடர்புடைய முயற்சியாக காணப்படுகின்றது. சர்வதேச சமூகத்தில் எமது பிரச்சினை முன்னர் இருந்ததை விட முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஆந்த தீர்;மானம்n எதனைக் கூறுகின்றதுஇ யுத்தம் நடைபெற்ற போது நடந்த சம்பவங்கள் தொடர்பாக உண்மை அறியப்பட வேண்டும். நீதியின் அடிப்படையில் பொறுப்புக்கூறல், பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் வழங்க வேண்டும். மீள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும், Nதிய பிரச்சினைக்கு தீர்;வு ஏற்பட வேண்டும். இந்த சகல இலங்கை அரசாங்கம் வாக்குறுதி கொடுத்துள்ளது. தற்போது அந்த கருத்துக்களுக்கு சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.
இது தான் நிலமை. இந்தப்பின்னணியில் தான் இந்த தேர்தல் நடைபெறுகின்றது. இந்த தீர்மானத்தினையும், இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதியையும் விட, மக்கள் மீது ஆட்சி புரிவதாக இருந்தால் அந்த மக்களின் சம்மதம் மற்றும் இணக்கப்பாடு இருக்க வேண்டும். ஜனநாயக ரீதியாக நடைபெறுகின்ற தேர்தலில், மக்கள் தெரிவிக்கின்ற கருத்தின் அடிப்படையில், ஆட்சி புரிகின்றவர்களுக்கு, மக்கள் தமது சம்மதத்தினை தெரிவிக்க வேண்டும்.
ஓவ்வொரு தேர்தலிலும் மக்கள் மிகவும் தெளிவாக தமது அரசியல் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளார்கள். உள்ளக இறையாண்மையின் அடிப்படையில் நாம் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களிலும், சுயாட்சி மீறப்பட்டு, இன்றும் மீறப்பட்டு, இன்று நடைபெறும் ஆட்சி எம்மீது திணிக்கப்பட்ட ஆட்சி இந்த நிலமை தொடர முடியாது. விரைவில் முடிவுக்கு வர வேண்டும்.
ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்;மானத்தின் பிரகாரம் முடிவுக்கு வர வேண்டும். பொருளாதார சமூக கலாசாரத்தின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தினால் ஏற்கொள்ளப்பட்ட அடிப்படையில் எமக்கு உள்ளக சுயநிர்ணய உரிமைக்கு உரித்துண்டு.
நிர்வாக அதிகாரத்தினைப் பயன்படுத்தும் அதிகாரம் உண்டு. இலங்கை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படையில் உரிமை உண்டு, சர்வதேசத்தின் வெளியக சுயநிர்ணய உரிமைக்கு உரித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொண்டு இலங்கை அரசு கொடுத்துள்ள வாக்குறுதிகள். சுர்வதேச சட்டத்தில் உண்டு. சர்வதேச சமூகம் மிகவும் உண்ணிப்பாக கவனித்துக்கொண்டிருக்கின்றது. இந்த தேர்தலில் தமிழ் மக்கள் எந்தவிதமான முடிவுகளை எடுப்பார்கள் என சர்வதேச சமூகம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது. துமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்கான கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருந்துள்ளது. இந்த நிலமை தொடர வேண்டும். பலமடைய வேண்டும். மக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். எமக்குள் என்னவித அதிதிருப்தி இருந்தாலும் கூட எந்தவிதமான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட அவற்றினை பக்கத்தில் வைத்து விட்டு, இந்த தேர்தலை தமிழ் தேசிய கூட்டமைப்பினைப் பலப்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.
தேர்தல் காலத்தில் சில கருத்து வேறுபாடுகள் இடம்பெறுவது வழமை. இந்தச் சூழ்நிலையில், எமது கையில் உள்ள ஒரே ஒரு ஆயுதம் எமது ஒற்றுமை. எமது ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும். இந்தத் தேர்தலில் நாம் அடையும் தீர்;வு ஒருமித்த தீர்வாக இருக்க வேண்டும். 1956 ஆம் ஆண்டில் இருந்து இற்றை வரை எமது முடிவில்; இருந்து வெளிவரவில்லை என்ற கருத்து வெளிவர வேண்டும். எவ்வாறான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதை ஒரு பக்கத்தில் வைத்து விட்டு, இந்தத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் குரலையும், கரங்களையும் பலப்படுத்தக் கூடிய வகையில், செயற்பட வேண்டுமென்றும் பொது மக்களிடம் வேண்டுகோள்விடுத்தார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like