சாதியை பாத்திருத்தால் வேலுப்பிள்ளை பிரபாகரனை தேசியத் தலைவராக ஏற்றிருக்க மாட்டார்கள் – எம்.கே.சிவாஜிலிங்கம்

சமயத்தை பாத்திருந்தால் தந்தை செல்வாவை தலைவராக ஏற்றிருக்க மாட்டோம் , சாதியை பாத்திருத்தால் வேலுப்பிள்ளை பிரபாகரனை தேசியத் தலைவராக ஏற்றிருக்க மாட்டார்கள் , பிரதேச விரோத்த்தினை பார்த்திருந்தால் சம்பந்தன் ஐயாவை தலைவராக ஏற்றிருக்க மாட்டார்கள் என்றார் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

பாசையூரில் மாநாகர சபை வேட்பாளர் ஆனோல்ட்டை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கே இது தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

இன்று யாழ்ப்பாணத்திலே எவ்வாறாயினும் தாம் இடம்பிடிக்க வேண்டுமென்பதற்காக பல பொய்களை அவிழ்த்து விடும் இக் காலத்தில் தற்போது புதிதாக நாம் சைவ மத்த்திற்கு எதிரானவர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியாவது வெல்ல முடியுமா என்ற கனவு உலகிலும் இரண்டாம் நிலை அரசியல் நிலமைக்கு இறங்கியுள்ளனர்.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் எமது மக்கள் என்றுமே இன , மொழி உணர்வை பாதுகாத்து மதிப்பவர்கள் அதே நேரம் சமயத்தை பின்பற்றுபவர் ஆனால் சிலர் தாம் தோற்பது திண்ணம் என தெரிந்தமையால் தமக்கு இசைந்தவர்கள் மூலம் மத ரீதியிலில் கூட்டமைப்பு சைவ சமயத்திற்கு எதிரானது என கான்பிக்க பொய்களை அவிழ்த்து விடுகின்றனர். உண்மையில் தமிழ் மக்கள் சமயத்தை பாத்திருந்தால் அன்று தந்தை செல்வாவை தலைவராக ஏற்றிருக்க மாட்டோம் , அதன் பின்பு சாதியை பாத்திருத்தால் வேலுப்பிள்ளை பிரபாகரனை தேசியத் தலைவராக வெள்ளாளர்கள் ஏற்றிருக்க மாட்டார்கள் , இதே போன்று பிரதேச விரோத்த்தினை பார்த்திருந்தால் சம்பந்தன் ஐயாவை இன்றும் தலைவராக ஏற்றிருக்க மாட்டோம்.

வல்வெட்டித்துறை மண் ஒரு விகிதமே கிறிஸ்தவர்களைக் கொண்ட ஓர் பிரதேசம் அங்கே நாம் கடந்த ஆட்சியில் கூட்டமைப்பின் சார்பில் ஆறு உறுப்பினர்கள் இருந்தோம் அதில் ஐவர் சைவ சமயத்தினையும் ஒரே ஒருவர் கிறிஸ்தவ மத்த்தில் இருந்தபோதும் அங்கே இருந்த ஐந்து சைவ உறுப்பினர்களும் ஒப்பமிட்டு எழுத்தில் கடிதம் வழங்கியிருந்தோம் கிறிஸ்தவ உறுப்பிரையே உப தவிசாளராக . நாம் என்றுமே மத ரீதியில். எதனையும் அனுகவில்லை.

இந்த நிலையிலேயே இங்கே போட்டியிடும் ஏனைய கட்சிகள் எம்மீது சுட்டுவிரலை நீட்டுகின்றனர். அது மட்டுமன்றி என் தொடர்பிலும் விமர்சணத்தை முன்வைக்கத் தவறவில்லை. மூன்று மாத்த்திற்கு முன் ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்தபோது கறுப்புக் கொடிப் போராட்டம் இடம்பெற்ற நிகழ்வில. என்னை அடித்துக் கலைத்திருப்பேன் என கஜேந்திரன் கூறுகின்றார். ஓம் அவர் அடித்திருப்பார் ஏனெனில் அவர்தான் கோத்தபாயாவின் செல்லப்பிள்ளை ஆயிற்றே அதனால் அவர் அடித்திருப்பார். அவர. கோத்தபாய ராயபக்சாவின் செல்லப்பிள்ளை இல்லை என மறுக்க கூடும்.

அவ்வாறு கூறுவதற்கு சான்று இந்த நாட்டிலே வெள்ளை வானில் கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கானோர் இன்றும் இல்லை. ஆனால் அவரது தம்பியும் கடத்தப்பட்டார். இவ்வாறு கடத்தப்பட்டவர் விடுவிக்கப்பட்டு இன்றும் உள்ளார் என்றார் நீங்கள் கோத்தபாயாவின் செல்லப் பிள்ளை அவ்வாறானால் எம்மீது தாக்குவீர்கள்தான். இதேநேரம் சயிக்கிள் சின்னத்தில. போட்டியிடும் கட்சியினர் மாற்றம் , மாற்றம் என்கின்றனர் அது என்ன மாற்றம். அதற்காக நீங்கள் என்ன செய்தீரகள்.

கஜேந்திரகுமார் கூறுகின்றார் ஐ.நா அமர்விற்கு கூட்டமைப்பு இரண்டு பக்கத்தில் மட்டும் அறிக்கை சமர்ப்பித்தனராம். அதேநேரம் தான்தான் பசில் ராயபக்சாவோடும் நடேசனுடனும் பேசி வெள்ளைக்கொடியோடு சரண்டைய ஏற்பாடு செய்த்தாக கூறுகின்ற நிலையில் நடேசன் புலித்தேவன் போன்றோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த விடயத்தினை கஜேந்திரகுமார. இன்றுவரை ஐ.நாவிற்கு சாட்சியாக எழுதி வழங்கவில்லை .

நான் சவால் விடுகின்றேன் அவ்வாறு சாட்சி வழங்கியிருந்தால் கஜேந்திரகுமார் அதனை வெளியிடமுடியுமா ? நான் 10 பக்கத்தில் சாட்சி வழங்கியுள்ளேன் . அதனை என்னால் காட்ட முடியும். என்றார்.