அரச ஊழியர்களுக்கு 10ம் திகதிக்கு முன் சம்பளம் வழங்கப்படும்! அரசாங்கம் அறிவிப்பு

அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஏப்ரல் மாத ஊதியம் 10ம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

நிதி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. அத்துடன், ஓய்வூதிய கொடுப்பனவுகள் 3ம் திகதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில், கொரோனா வைரஸ் பரவலை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையினை கருத்திற்கொண்டு அரசாங்கம் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளதுடன், பல திட்டங்களையும் முன்னெடுத்துள்ளது.

இந்நிலையிலேயே, தற்போது அரச ஊழியர்களுக்கும் ஏப்ரல் மாத ஊதியம் 10ம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.