இலங்கையில் கொரோனா தொற்றில் மக்கள் அவதி!! இந்து ஆலயங்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள்

இலங்கையில் இருக்கும் சைவ கோயில்கள் எதற்கு இருக்கிறது. வருமனை ஈட்ட ஒரு வர்த்தக நிலையமாக தான் சைவ கோயில்கள் இலங்கையில் இருக்கின்றதா? அல்லது மக்களுக்கு நல்ல வாழ்க்கைகளை, நல்ல போதனைகளை வழங்கி இருக்கா என சமூக அர்வலர் ஒருவர் முகநூல் வாயிலாக பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மேலும் மக்கள் துன்ப படும்போதும், சிரமம்படும் போது உதவுவதற்காக இருக்கிறதா? அல்லது நமக்கெல்லாம் பக்கபலமாக தான் இருக்கா? என்னதற்கு இந்தக் கோயில்கள் இங்கு இருக்கின்றது. எதற்காக இந்த கோயில்களை இங்கு உருவாகி வைத்திருக்கின்றனர்.

இந்த சைவ கோயில்கள் எப்போதும் மக்கள் கஷ்ட்ப்பட்டும்போதும், துன்பப்படும்போதும், பெரிய இக்கட்டான சூழ்நிலைகளிலும் எந்த இடத்திலும் மக்களுக்கு உதவ இல்லை.

மேலும் இந்த சைவ கோயில்கள் வடகிழக்கு முழுவதிலும் ஆயிரக்காணக்கான கோயில்கள் உள்ளது. மிகபெரிய வருமனம் ஈட்ட கூடிய கோயில்கள் வடக்கில் எங்கும் இருக்கின்றது. மிக பெரிய வருமானங்களை ஈட்டகூடிய கடவுளை வைபவத்தில் வைத்து கொண்டு இருக்கிறீர்கள்.

தற்போது மக்கள் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டு தொழிலுக்கு போக முடியமால் இருகின்றனர். மேலும் பல மாகாணங்கள் முடக்கப்பட இருகின்றன. மேலும் பல மாகாணங்கள் சில தினங்களில் முடக்கப்பட இருக்கலாம்.

இந்த சூழ்நிலைகளில் சைவ கோயில்களில் இருக்கும் உண்டியல்களில், அல்லது வைபவங்களில் இருக்கும் பணங்களை எடுத்து இந்த மக்களுக்கு எதாவது உதவி செய்து யார்வது பதவிக்கு வந்துயிருகின்றீகளா என அவர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேலும் பல முக்கிய விடயங்களை அவர் காணொளி வாயிலாக பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ….