நாய்குட்டிகளையும் பாம்புகளையும் பிடித்து இறைச்சியாக்கி சமைத்து சாப்பிடும் பாபா!!

மத்தியபிரதேசத்தில் நபர் ஒருவர் நாய்க்குட்டிகள் மற்றும் பாம்புகளை சமைத்து சாப்பிட்டதால் பொதுமக்களினால் தாக்கப்பட்டு பொலிசில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பாகியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் ஜெக்தீஷ்புராவைச் சேர்ந்தவர் Nuarangi Lal, ’பாபா’ என்று அழைக்கப்படும் இவர், நாடோடி வாழ்க்கை நடத்தி வருபவர்.இந்நிலையில் Nuarangi Lal, நான்கு நாய்க்குட்டிகளை சமைத்து சாப்பிட்டதாகக் கூறி, பொதுமக்கள் இவரை அடித்து உதைத்துள்ளனர்.

மேலும், அவர் தங்கியிருந்த தற்காலிக குடியிருப்பையும் எரித்துவிட்டு பொலிசிடம் ஒப்படைத்தனர்.இந்நிலையில் நாய்க்குட்டிகள் மட்டுமின்றி, பாம்புகளையும் தான் சமைத்து சாப்பிட்டதாகவும், அவை தனது உடலுக்கு வலிமையைத் தருவதாகவும் Nuarangi Lal தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உளவியலாளர் ஒருவர் கூறுகையில், தனியாக வாழும் நபர்கள், தாங்கள் ஒரு கற்பனை உலகத்தில் வாழ்வதாக நினைத்துக் கொள்வார்கள்.அவர்களுக்கு, நிஜ உலகுக்கும் கற்பனை உலகுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like