தனக்கு தொற்றிய வைரஸ் ஏனையோருக்கு தொற்றாமலிருக்க தற்கொலை செய்து கொண்ட தாதி

உலகத்தின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்தள்ள கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை உலகளாவிய ரீதியில் 24,090 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் 8215 பேர் இத்தாலி நாட்டிலேயே உயிரிழந்துள்ளனர் என்பதோடு கொரோனாவால் அதிக மரணங்களை எதிரகொண்ட முதலாவது நாடு இத்தாலி என்பதும் குறிப்பிடத்தக்கது.

அது மாத்திரமின்றி இத்தாலியில் 80,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இத்தாலியில் வைத்தியசாலையில் கடமையாற்றிய 34 வயதுடைய Daniela Trezzi என்ற தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டதை தொடர்ந்து அவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களுக்கு வைத்திய உதவி சிகிச்சையளித்து வந்த குறித்த தாதிக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அவரை கொரொனா தொற்று தாக்கியுள்ளமை உறுதி செய்யப்பட்டதுடன், ஏனையவர்களுக்கும் அவரிடம் காணப்பட்ட கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தற்கொலை செய்துக்கொண்டுள்ள தாதியின் புகைப்படங்கள்…!