ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு பொலிஸ் பிணை கிடையாது

ஊரடங்கு சட்டத்தை கடைப்பிடிக்காது வீதிகளில் நடமாடுவோரைக் கைது செய்தால் பொலிஸ் பிணை வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் பொலிஸாரும் இராணுவத்தினரும் கடுமையாக நடவடிக்கைகளை எடுப்பார் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஊரடங்குச் சட்டத்தை மீறுவோர் கைது செய்யபட்டால் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்படமாட்டார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்படுவோர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.