கொவிட்-19 தொற்று காரணமாக சுவிட்சர்லாந்தில் பலியான முதலாவது இலங்கையரின் இறுதி கிரியைகள் அந்த நாட்டிலேயே முன்னெடுக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.
அவரின் இறுதி கிரியைகள் சுவிட்சர்லாந்திலுள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படுவதாக வெளியுறவுத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த முதலாவது இலங்கையர் தொடர்பான தகவல் சுவிட்சர்லாந்தில் பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் – புங்குடுதீவை சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சுவிட்சர்லாந்து அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியதாக பெர்லினில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் சென்-கெலன் ளுவ. புயடடநn பகுதியில் வசித்து வந்த அவர்இ கடந்த 25ஆம் திகதி உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சுவிட்சர்லாந்தில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 951 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 197 பேர் இதுவரையில் பலியாகியுள்ளனர்.
அத்துடன் இலங்கையில் இதுவரையில் 106 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அவர்களில் 6 பேர் சிகிச்சைகளின் பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளதோடு 4 பேர் ஐ.டி.எச் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை 238 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவமனைகளில் கண்கானிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருபவர்களில் 24 பேர் ஹோமாகம மருத்துவமனையில் கண்கானிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த மருத்துவமனையில் முக்கிய பரிசோதனைகளை மேற்கொள்ள ரோபோ இயந்திரத்தை பயன்படுத்துவதற்காக தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த ரோபோ இயந்திரத்தை நாளை முதல் செயற்படுத்தப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மார்ச் மாதம் 25 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரையான பகுதியில் முக்கியமான காலப்பகுதி என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.