யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தற்கொலைக்கு முயற்சி

“யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குடும்பத்தலைவர் ஒருவர் கழுத்தில் பிளேட்டால் கீறி தற்கொலைக்கு முயற்சித்தார். அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது.

“மதுபோதையில் வந்த தன்னை தாக்குவதாக குடும்பத்தலைவரின் மனைவி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதனடிப்படையில் குடும்பத்தலைவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். வாக்குமூலம் பெற்ற பின்னர் அவர் பொலிஸ் நிலையக் கூண்டில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
குடும்பத்தலைவர் நேற்றிரவு தற்கொலைக்கு முயற்சித்தார். சட்டைப்பைக்குள் மறைத்துவைத்திருந்த பிளேட்டால் தனது கழுத்தில் அவர் கீறியுள்ளார்.
கூண்டில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேறு சந்தேகநபர்கள் குடுத்தலைவரின் செயலை அவதானித்தவுடன் அபாயக்குரல் எழுப்பினர்.
அதனால் குடும்பத்தலைவரின் தற்கொலை முயற்சியைத் தடுத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர்.
அவருக்கு கழுத்தில் ஏற்பட்ட காயத்துக்கு வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்படுகிறது” என்று பொலிஸார் மேலும் கூறினர்.