இலங்கையில் முதலாவது கோரோனா நோயாளி உயிரிழப்பு

கொரோனா நோய் தொற்றின் காரணமாக இலங்கையின் முதலாவது மரணம் சம்பவித்துள்ளது.

மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். குறித்த நபருக்கு ஏற்கனவே உயர் குருதி அழுத்தம், நீரிழிவு நிலை என்பவற்றுடன் ஒரு சிறுநீரகம் செயலிழந்திருந்துள்ளமை சிகிச்சையின்போது தெரியவந்துள்ளது.

கொழும்பு – அங்கோடை தேசிய தொற்று நோயில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கோரோனா நோயாளி உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது.

கோரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழக்கும் முதலாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோரோனா தொற்றுக்குள்ளாகிய தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் (ஐடிஎச்) அதிதீவிர சிகிச்சைக்கு உள்படுத்தப்பட்டிருந்தார். ஆரம்பத்திலிருந்தே அவரது நிலை கடுமையான நிலையிலிருந்தது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அவர் இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சீனப்பெண் ஒருவர் உள்ளிட்ட 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 101 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாகச் செயற்பட்ட 63 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.