யாழில் 101 வயது முதியவர் மரணம்!

யாழில். 101 வயதுடைய முதியவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி தனங்கிளைப்பை பிறப்பிடமாக கொண்டவரும் கலாசாலை வீதி. திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா நமசிவாயம் என்பவரே உயிரிழந்தவராவர்.ஓய்வு பெற்ற கிராம சேவையாளரான முதியவர் கடந்த 1917 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 18ஆம் திகதி பிறந்தார்.இவர், கடந்த ஆண்டு தனது 100 ஆவது பிறந்த நாளை தனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள், பூட்டபிள்ளைகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
இவருக்கு 11 பிள்ளைகளும், 33 பேரப்பிள்ளைகளும், 12 பூட்டப்பிள்ளைகளும் உள்ளனர். அந்நிலையில் கடந்த ஓரிரு மாதங்களாக சுகவீனம் உற்று இருந்த நிலையில் நேற்றைய தினம் மதியம் உயிரிழந்தார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like