சீனாவில் கிருமி ஆயுத கிடங்கு? அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட அமெரிக்க எழுத்தாளர்!

சீனா தனது நாட்டில் கிருமிகள் அடங்கிய ஆயுத கிடங்கை வைத்துள்ளதாகவும், அதில் இருந்தே கொரோனா வைரஸ் வெளியேறியதாகவும் நியூயார்க் போஸ்ட் என்ற அமெரிக்க ஊடகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரத்தில் வன விலங்குகளை விற்பனை செய்யும் சந்தை ஒன்றில் இருந்து, கொரோனா வைரஸ் பரவியதாக உலகம் நம்பி வருகிறது.

ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த, Steven W. Mosher என்கின்ற எழுத்தாளர் இந்த தகவல்கள் அனைத்தையும் திட்டவட்டமாக மறுத்துள்ளடன், அவர் நியூயார்க் போஸ்ட் என்கின்ற பத்திரிக்கையில் எழுதியுள்ள கட்டுரை தலை சுற்ற வைக்கிறது.

சீனாவின் வுஹான் நகரத்தில் தான் சீனாவின் நுண்ணுயிரிகள் ஆய்வகம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அங்கு பல கிருமிகளை சீனா வைத்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா பரவியதை தொடர்ந்து, சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா வைரஸ் போன்ற புதிய மேம்பட்ட வைரஸ்களைக் கையாளும் வகையில், நுண்ணுயிரியல் ஆய்வகங்களில் பாதுகாப்பு நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் வகுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையே ஸ்டீவன் தனது வாதத்திற்கு ஆதாரமாக காட்டியுள்ளார். மேலும் அண்மையில் நடைபெற்ற அவசர கூட்டம் ஒன்றில் பேசிய சீன அதிபர் ஜிங்பிங், எதிர்காலத்தில் கொரோனோ வைரஸ் தாக்குதல் போன்ற தாக்குதல்கள் ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதன் மூலம் தங்களிடம் கொடூர கிருமிகள் பாதுகாக்கப்பட்டு வருவதை சீன அதிபர் மறைமுகமாக ஒப்புக் கொண்டதாக கட்டுரையாளர் ஸ்டீவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வுஹானில் உள்ள ஆய்வகமும், வன விலங்குகள் சந்தையும் அருகருகே இருப்பதாகவும், ஆய்வகத்தில் சோதிக்கப்படும் குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் அருகே உள்ள சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் கட்டுரையாளர் தெரிவித்துள்ளார்.

இப்படி குரங்குகளை விற்றே சில விஞ்ஞானிகள் நிறைய பணம் சம்பாதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அப்படி கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள விலங்குகளை விற்பனை செய்ததன் மூலம் அந்த நோய் பரவி இருக்கலாம் என சந்தேகம் இருந்தாலும், அதிலும் தனக்கு நம்பிக்கை இல்லை என ஸ்டீவன் கூறியுள்ளார்.

ஆய்வகத்தில் வேலை செய்பவர்கள் மூலமாக, மனிதர்களிடம் இருந்து, மனிதர்களுக்கு கொரோனா பரவி இருக்கலாம் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆய்வாளர் ஸ்டீவனின் இந்த குற்றச்சாட்டுக்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனை சீன ஆதரவு ஊடகங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.