மலர்ச் செண்டுகளாக மாறிய மடிக்கணனிகள்!! சுதந்திர தின நிகழ்வில் நடந்த கோலாகல நடனம்!!

இலங்கையின் சுதந்திர தினத்தின் போது அறிமுகம் செய்யப்பட்ட லப்டொப் நடனம் மாறுபட்ட வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் 70 வது சுதந்திர தினம் கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று நடைபெற்றது.இதன்போது இலங்கையில் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், பாடசாலை மாணவிகளின் லப்டொப் மற்றும் தொலைகாட்டிகளுடான நடனம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த முயற்சிக்கு பலதரப்பினரால் கடும் எதிர்ப்பு வெளியிட்ட நிலையில், லப்டொப் நடனத்தை நீக்குவதற்கு கல்வியமைச்சு உத்தரவிட்டது.எனினும், பல நாட்களாக மாணவிகள் பயிற்சியில் ஈடுபட்டமையினால் நடனத்தை நீக்குவதில் சிக்கல் நிலை காணப்பட்டது. இதனால் லப்டொப் மற்றும் தொலைகாட்டி என்பனவற்றுக்காக மலர்ச்செட்டுகளுடன் நடனம் ஆடப்பட்டது.இந்த மாற்றம் குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like